சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு – 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!!

0
சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு - 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!!
சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு - 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!!
சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு – 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி!!

சபரிமலை ஐயப்பன் கோவில் சித்திரை விஷூ பூஜைக்காக இன்று (10-04-2021) நடை திறக்கப்படுகிறது. அதன்படி இன்று முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை தினமும் 10,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு அனுமதி

கொரோனா பரவல் காரணமாக தமிழக கோவில்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சபரிமலையில் புகழ்பெற்ற சித்திரை விஷூ சிறப்பு பூஜை நடைபெறவுள்ளது. அதற்காக இன்று (10-04-2021) மாலை கோவில் நடை திறக்கப்படவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி சபரிமலையில் ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் விஷூ கனி தரிசனம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று (10-04-2021) மாலை 5 மணியளவில் திறக்கப்படும் கோயில் நடை ஏப்ரல் 18 ஆம் தேதியில் மீண்டும் மூடப்படும். நாளை முதல் துவங்கும் இந்த சித்திரை விஷூ சிறப்பு பூஜை ஏப்ரல் 18ம் தேதி வரை நடைபெறும். உதயாஸ்தமன பூஜை, படிபூஜை மற்றும் களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் இந்த நாட்களில் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அச்சம் – துணிகள் ஏற்றுமதி நிறுத்தம்!!

நாளை முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பூஜையில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். தினமும் 10,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்பாக ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்று சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இந்த சான்றிதழ் தேவையில்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!