இந்திய ஆடிட்டர் ஜெனரல் வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!
கம்ப்ரோலர் & ஆடிட் ஜெனரல் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் (CAG) இருந்து Deputy Director பணிகளுக்கு என அறிவிப்பு கடந்த மாதத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CAG வேலைவாய்ப்பு விவரங்கள் :
- அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
- அரசு/ தனியார் நிறுவனத்தில் Sr. Audit/ Accounts Officer ஆக பணிபுரிந்தவர்கள், பணியில் 05 ஆண்டுகளாவது முன்னனுபவம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB
Group” Join Now
- ஏதேனும் ஒரு கல்வி நிலையத்தில் இளங்கலை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
- அதிகபட்சம் Level 11 வரை தேர்வாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
- Deputation அடிப்படையில் பதிவு செய்வோர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பிக்க முறை :
விருப்பமுள்ளவர்கள் 12.04.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.