10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிருக்கு மாதம் ரூ.7,000 – மத்திய அரசின் புதிய திட்டம்
மக்களுக்கு பயன்படும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் மகளிருக்கு உதவும் வகையில் பல்வேறு திட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தற்போது பிமா சகி யோஜனா என்ற புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு ரூ.1000/- / ரூ.2000/- / ரூ.7000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.7,000/- வழங்கப்படும்.
மக்களே உஷார்….பென்ஷன் திட்டங்கள் பெயரில் அதிகரிக்கும் ஆன்லைன் மோசடி!
18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் https://licindia.in/hi/test2 என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பத்துடன் வயதுச் சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிப்பது கட்டாயமானதாகும்.


























