ரூ.1000 உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா? – காரணமறிய உடனே இதை செய்யுங்க!
தமிழகத்தில் ரூ.1000 உரிமைத்தொகைக்கான விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்ட நிலையில் எவ்வாறு காரணத்தை அறிவது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.1000 உரிமைத்தொகை:
தமிழகத்தில் மகளிருக்கான ரூ. 1000 உரிமைத்தொகை திட்டம் கடந்த செப். 15 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்த திட்டத்தின் மூலமாக 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 57 லட்ச விண்ணப்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் எதற்காக ரூ.1000 கிடைக்கவில்லை என பொதுமக்கள் காரணமறியால் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று உங்களது ரேஷன் கார்டு எண்ணை கூறினாலே எதற்காக ரூ.1000 கிடைக்கவில்லை என அதிகாரிகள் கூறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கான புதிய வங்கி சேவை – SBI அறிமுகம்!
மேலும், பெரும்பாலான குடும்ப தலைவிகளின் ரேஷன் கார்டு எண்ணை பதிவிட்டு பார்த்ததில் வீட்டில் கார் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருந்தது மற்றும் வருமான வரி தாக்கல் செய்யததால் நிராகரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனிடையே, விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்டவர்கள் மீண்டும் ரூ.1000 பெற விரும்பினால் அடுத்த 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.