RPF SI தேர்வு முடிவுகள் வெளியீடு – பதிவிறக்கம் முறை மற்றும் முழு விவரங்கள் உள்ளே..!!
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது பல்வேறு பிரிவின் கீழ் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்தி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் RPF Sub Inspector பணிக்கென காலியாக உள்ள 432 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் கட்ட தேர்வு (CBT தேர்வு) வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்ததாக PET/ PMT -யில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CBT தேர்வு முடிவுகள் டவுன்லோட் செய்யும் முறை :
தேர்வர்கள் RRB-ன் அதிகாரபூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும்
அதில் “RPF SI Result” என்பதை கிளிக் செய்ய வேண்டும்
பின்னர் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு submit என்பதை கிளிக் செய்யவும்.
தற்போது தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும், பின் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


























