விஐபி வருவதாக சொல்லி அனுவை வேலை வாங்கும் அர்ஜுன் – இன்றைய “ரோஜா” சீரியல் எபிசோட்!

0
விஐபி வருவதாக சொல்லி அனுவை வேலை வாங்கும் அர்ஜுன் - இன்றைய
விஐபி வருவதாக சொல்லி அனுவை வேலை வாங்கும் அர்ஜுன் - இன்றைய "ரோஜா" சீரியல் எபிசோட்!
விஐபி வருவதாக சொல்லி அனுவை வேலை வாங்கும் அர்ஜுன் – இன்றைய “ரோஜா” சீரியல் எபிசோட்!

சன் டிவி ரோஜா சீரியலில் இன்று ஜெயிலுக்கு செல்ல வேண்டாம் என்பதால் அர்ஜுனும், ரோஜாவும் சேர்ந்து அனுவை வேலை வாங்குகின்றனர். மேலும் முக்கியமான விஐபி வர இருப்பதாக அனுவை சமைக்க சொல்கிறார் அர்ஜுன்.

ரோஜா சீரியல்:

இன்று “ரோஜா” சீரியலில், அனு உடல்நிலை சரியானதால் அவரை ஜெயிலுக்கு அழைத்து செல்லாமல் ஜாமீன் வாங்கி விடுகின்றனர். அனு நாங்கள் சொல்லும் வேலைகளை செய்தால் மட்டுமே இந்த வீட்டில் இடம் உண்டு என ரோஜாவும், அர்ஜுனும் கண்டிஷன் போடுகின்றனர். இந்நிலையில் இன்று முக்கியமான விஐபி வருவதாகவும் அவர்களுக்கு சமைக்க வேண்டும் என அனுவிடம் சொன்னதால் அவர் சமைக்க தொடங்குகிறார். அனு மசாலா அரைக்க அரைக்க மிக்சியை பயன்படுத்த முயற்சித்தபோது அங்கு வரும் அர்ஜுன் அவரை அம்மி, உரலில் தான் அரைக்க வேண்டும் என சொல்கிறார்.

வனிதாவின் பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள் – கலர்ஸ் தமிழ் சேனல் நிகழ்ச்சி ப்ரோமோ!

இதை கேட்ட அனுவிற்கு பயங்கரமாக கோவம் வருகிறது. உடனே அனு அரைக்க தொடங்குகிறார். அவருக்கு உதவியாக யசோதா இருக்கிறார். பின்னர் அவர்களுக்கு உதவியாக வேலைக்காரியை வேலை பார்க்க சொல்ல அர்ஜுன் சொல்லாமல் எதுவும் செய்யமாட்டேன் என வேலைக்காரி சொல்கிறார். பின்னர் வெண்பகத்தை வரவைக்க அனுவின் திட்டத்தின் படி சாக்ஷி சாமியாரை பார்க்க வரவைக்கிறார். செண்பகம் வந்தால் தான் அது முடிவுக்கு வரும் என அனு சாக்ஷியிடம் போனில் பேசி கொண்டிருக்கும்போது செண்பகம் அங்கு வந்து இறங்குகிறார்.

அப்போது செண்பகம் வந்துவிட்டார் என அனுவிடம் சாக்ஷி சொல்ல, திட்டம் நிறைவேறிவிட்டதால் இந்த வீட்டில் தன்னை எதுவும் செய்ய முடியாது என நினைத்து சந்தோசப்படுகிறார். செண்பகம் வரும் நேரம் பார்த்து ஒரு பெண் இவர் சக்திவாய்ந்த சாமியார் என சொல்லி பில்டப் செய்கிறார். அதன் பிறகு செண்பகம் அந்த சாமியாரை பார்க்க செல்லும்போது அவர் எழுந்து சென்று விடுகிறார். இன்னும் சீக்கிரம் வந்திருந்தால் அவரை பார்த்திருக்க முடியும் என அங்கே வேலை செய்யும் பெண் சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

பின்னர் உள்ளே அறையில் சந்திக்க ஏற்பாடு செய்கின்றனர். அப்போது அவர் செண்பகத்திற்கு ஏதோ ஒன்றை கொடுத்து மயக்கம் போட வைக்கிறார். அதன் பின் சாக்ஷி திட்டப்படி அவரை அவர்கள் இடத்திற்கு கொண்டு செல்கின்றனர். யாரோ விஐபி வரப்போகிறார்கள் என வீட்டில் எல்லோரும் காத்திருக்க அர்ஜுன் அவரது காரில் 10 ஆதரவற்ற குழந்தைகளை வீட்டுக்கு கூட்டி வருகிறார். அதை பார்த்து அனு, பாட்டி என எல்லோரும் ஷாக் ஆகின்றனர். இந்த குழந்தைகளுக்காகவா என்னை இப்படி சமைக்க வைத்தார் என நினைத்து அனு அதிர்ச்சி அடைகிறார். வீட்டுக்குள் வந்த குழந்தைகள் குஷியாக விளையாட தொடங்குகிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here