வனிதாவின் பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள் – கலர்ஸ் தமிழ் சேனல் நிகழ்ச்சி ப்ரோமோ!

0
வனிதாவின் பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள் - கலர்ஸ் தமிழ் சேனல் நிகழ்ச்சி ப்ரோமோ!
வனிதாவின் பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள் - கலர்ஸ் தமிழ் சேனல் நிகழ்ச்சி ப்ரோமோ!
வனிதாவின் பதிலால் அதிர்ச்சியில் ரசிகர்கள் – கலர்ஸ் தமிழ் சேனல் நிகழ்ச்சி ப்ரோமோ!

கலர்ஸ் தொலைக்காட்சியில் நடிகை வனிதா பங்கேற்றுள்ள கன்னித்தீவு நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதில் ரோபோ ஷங்கர் கேட்ட கேள்விக்கு வனிதாவின் பதில் அவர்களின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை வனிதா:

தமிழ் நடிகை வனிதா விஜயகுமார் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின்பு விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் திரைக்கு வந்தார். அந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியேறினார். பின்பு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். சமீபத்தில் விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஜோடியாக நடனம் ஆடினார்.

கிங் காங்கை தனது வீட்டில் வளர்க்கும் நடிகர் தனுஷ் – சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்!

இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினார். தற்போது நடிகை வனிதா சேனலையே மாற்றி விட்டார். விஜய் டிவியில் இருந்து கலர்ஸ் தொலைக்காட்சிக்கு சென்று விட்டார். அதில் கன்னித்தீவு உல்லாச உலகம் 2.0 நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியின் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கர் வாழ்க்கையில் எந்த பிரச்சனையுமே இல்லாமல் நிம்மதியாக இருக்க என்ன பண்ணனும் என்று கேள்வி கேட்டுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இதற்கு நடிகை வனிதா செத்துடலாம் என்று பதிலளித்துள்ளார். எப்போதும் தைரியமாக எதையும் எதிர்கொள்ளும் வகையில் பதிலளிக்கும் வனிதா இப்படி பதிலளித்தது அவர்களின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பதிலை உங்களிடம் இருந்து நாங்க எதிர்பாக்கல அக்கா என்று சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் வனிதா நாளுக்கு நாள் ஒல்லியாகி கொண்டே இருக்கிறார் அந்த ரகசியத்தை பகிருமாறு வனிதாவிடம் கேட்டு வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!