RITES நிறுவனத்தில் 70 காலியிடங்கள் – Engineering பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!
RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Team Leader, Project Engineer, Resident Engineer, Quality Engineer போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு என மொத்தமாக 70 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | RITES |
பணியின் பெயர் | Team Leader, Project Engineer, Resident Engineer, Quality Engineer, Junior Engineer, Junior Manager, QA / QC Engineer, Safety Engineer |
பணியிடங்கள் | 70 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
RITES காலிப்பணியிடங்கள்:
RITES நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 70 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
- Team Leader – 04 பணியிடங்கள்
- Project Engineer – 21 பணியிடங்கள்
- Resident Engineer – 01 பணியிடம்
- Quality Engineer – 03 பணியிடங்கள்
- Junior Engineer – 38 பணியிடங்கள்
- Junior Manager – 01 பணியிடம்
- QA / QC Engineer – 01 பணியிடம்
- Safety Engineer – 01 பணியிடம்
RITES பணிகளுக்கான கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் BE, B.Tech, Diploma, Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
RITES பணிகளுக்கான முன்னனுபவம்:
இந்த RITES நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணி சார்ந்த துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
DRDO நிறுவனத்தில் மாதம் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!
RITES பணிகளுக்கான வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.11.2023 அன்றைய நாளின் படி, 40 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.
RITES பணிகளுக்கான ஊதியம்:
இந்த RITES நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,80,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
RITES தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RITES விண்ணப்பிக்கும் முறை:
இந்த RITES நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 17.11.2023 அன்று முதல் 28.11.2023 அன்று வரை https://www.rites.com/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.