தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை (நவ. 18) சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் சிறப்பாக சூரசம்ஹாரம் நாளை நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Phone pay மூலமாகவே மெட்ரோ ரயில் டிக்கெட் – பயனர்கள் ஹாப்பி!!
மேலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு நாளை முதல் திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளை நவம்பர் 18 ஆம் தேதி வரை மூட மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 13 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கந்தசஷ்டி திருவிழா 19- ஆம் தேதி வரை நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.