தலைவிரித்தாடும் வேலையிழப்பு அச்சம்.. இந்த இந்திய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஆபத்து!

0
தலைவிரித்தாடும் வேலையிழப்பு அச்சம்.. இந்த இந்திய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஆபத்து!
தலைவிரித்தாடும் வேலையிழப்பு அச்சம்.. இந்த இந்திய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஆபத்து!
தலைவிரித்தாடும் வேலையிழப்பு அச்சம்.. இந்த இந்திய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு ஆபத்து!

உலகின் முக்கிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை இந்தியாவையும் பாதித்துள்ளது. அதிலும், முக்கியமாக நாட்டின் ஐடி துறையில் தவிர்க்க முடியாத சில பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு பாதிப்பு:

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக நல்ல முன்னேற்றை அடைந்து வந்த ஐடி துறையானது சமீப காலமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் வீழ்ச்சியை அடைந்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார மந்தநிலை இந்தியாவின் முக்கிய நான்கு ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் எச்சிஎல் ஆகியவற்றில் பணியாளர் நியமனத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

இந்த 4 நிறுவனங்களும் செப்டம்பர் வரையிலான 2022-2023ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 28,836 பேரை மட்டுமே புதிதாக நியமித்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டின் அதே காலாண்டின் கணக்கின் படி, இது அந்த எண்ணிக்கையில் பாதி தான் என்பது குறிப்பிடத்தக்கது. பல தலைமை நிர்வாக அதிகாரிகள், உலகளாவிய பொருளாதார மந்த நிலை அதிகரித்து வருவதாகவும், இதனால் நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஏற்கனவே உள்ள பணியாளர்களை சில நிறுவனங்கள் பணியில் இருந்து காலி செய்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

அரசின் காவல் துறை தேர்வில் நடந்த முறைகேடு.. ப்ளூடூத் கருவி பயன்படுத்தியது அம்பலம்!

Exams Daily Mobile App Download

இதனால், புதியவர்களை பணி நியமனம் செய்வது தற்போதைய நிலையில் கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால், முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் இது குறித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி, TCS தற்போதைய காலாண்டில் மேலும் 10,000 பேரை இணைக்க உள்ளதாகவும், HCL குறைந்தபட்சம் 30,000 புதியவர்களை நியமிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!