வருவாய் துறையில் ரூ.44,900/- சம்பளத்தில் வேலை – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!  

0
வருவாய் துறையில் ரூ.44,900/- சம்பளத்தில் வேலை - தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!  

வருவாய் துறை (Revenue Department) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை 19.02.2024 அன்று வெளியிட்டுள்ளது. இதில் Superintendent, Inspector ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் வருவாய் துறை (Revenue Department)
பணியின் பெயர் Superintendent, Inspector
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.04.2024 (With in 45 Days)
விண்ணப்பிக்கும் முறை Offline

வருவாய் துறை காலியிடங்கள்:

வருவாய் துறையில் (Revenue Department) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Superintendent – 01 பணியிடம்

Inspector – 01 பணியிடம்

தமிழக ரேஷன் கடைகளில் புதிய மாற்றம் – அரசின் சூப்பர் திட்டம்!

வருவாய் துறை பணிக்கான தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 06 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

வருவாய் துறை வயது:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Revenue Department மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் Pay Matrix Level – 06 / 07 என்ற ஊதிய அளவுகளின் படி, ரூ.35,400/- முதல் ரூ.44,900/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Revenue Department தேர்வு செய்யும் விதம்:

இந்த வருவாய் துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Revenue Department விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 03.04.2024 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!