விஜய் டிவி சீரியல்களில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் நடிகர், நடிகைகள்- இது தான் காரணமா?

0
விஜய் டிவி சீரியல்களில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் நடிகர், நடிகைகள்- இது தான் காரணமா?
விஜய் டிவி சீரியல்களில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் நடிகர், நடிகைகள்- இது தான் காரணமா?
விஜய் டிவி சீரியல்களில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் நடிகர், நடிகைகள்- இது தான் காரணமா?

சீரியல்கள் மூலம் மக்களின் பேராதரவை பெற்றிருக்கும் விஜய் டிவியில் இருந்து சீரியல் நடிகர், நடிகைகள் தொடர்ச்சியாக வெளியேறி கொண்டிருக்கும் செய்திகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

சீரியல் பிரபலங்கள்

தற்போது அதிகளவு பார்வையாளர்களை கொண்டிருக்கும் முன்னணி சேனல்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக சில மாற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் லீட் ரோலில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் சீரியலை விட்டு விலக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. இதில் சில தகவல்கள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சில செய்திகளின் உண்மை நிலவரம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.

பிக் பாஸ் சீசன் 5: ப்ரியங்காவிற்கு செம டோஸ் விடும் உலக நாயகன் – இன்றைய ப்ரோமோ!

விஜய் டிவிக்குள் இருந்தாலே சினிமா பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பது ஒரு முக்கிய பேச்சாக இருந்து வருகிறது. அது உண்மையும் கூட. ஏனென்றால் விஜய் டிவி சீரியல்களில் நடித்த பல நட்சத்திரங்கள் இன்று தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றனர். சிலர் நடிகர் அல்லது நடிகையாகவும் சிலர் காமெடி நட்சத்திரங்களாகவும் சினிமாவில் புதிய பரிணாமத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு விஜய் டிவி மூலம் சினிமாவில் பிரவேசித்த நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், பிரியா பவானி சங்கர், கவின் முதல் புகழ், பாலா, சிவாங்கி, தீபா வரை பலரை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

இப்போது விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு செல்லும் நடிகர், நடிகைகளின் பட்டியல் சற்று நீண்டுள்ளது. அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை காவ்யா, நடிகர் கவின் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகும் ஊர்க்குருவி திரைப்படத்தில் நடிக்க இருப்பதால் அவர் சீரியலை விட்டு விலகுகிறார் என கூறப்பட்டு வருகிறது. அதே போல ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் நடிகர் சூர்ய தர்ஷன் மற்றும் ‘பாரதி கண்ணம்மா’ நடிகை ரோஷினி ஹரிப்ரியன் ஆகியோர் வெள்ளித்திரைக்கு செல்ல இருப்பதாக தெரிகிறது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதாவின் திருமணநாள் கொண்டாட்டம் – வாழ்த்தும் ரசிகர்கள்!

அதனால் இவர்களும் அந்தந்த சீரியலை விட்டு விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் சில செய்திகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும் சமூக வலைதளங்களில் வெளியாகும் சில செய்திகள் ரசிகர்களை சற்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தவிர விஜய் டிவி நடிகர், நடிகைகள் இப்படி தொடர்ச்சியாக சீரியலை விட்டு விலகுவது அந்த சீரியலுக்கு பெரும் பின்னடைவாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!