‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதாவின் திருமணநாள் கொண்டாட்டம் – வாழ்த்தும் ரசிகர்கள்!

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை சுஜிதாவின் திருமணநாள் கொண்டாட்டம் - வாழ்த்தும் ரசிகர்கள்!
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' நடிகை சுஜிதாவின் திருமணநாள் கொண்டாட்டம் - வாழ்த்தும் ரசிகர்கள்!
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதாவின் திருமணநாள் கொண்டாட்டம் – வாழ்த்தும் ரசிகர்கள்!

சினிமாவில் அறிமுகமாகி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மூலம் மக்களின் மனம் கவர்ந்த நடிகை சுஜிதா இன்று தனது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை சுஜிதா

தற்போது விஜய் டிவியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனம் அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா சினிமாவில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். சின்னத்திரை தொடர்களின் மூலம் தமிழ் மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கும் இவர் ரஜினி, கமல், சத்யராஜ் என பல முன்னணி திரைப்பட நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவரை ஒரு நடிகையாக மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது தேவர் மகன், பாம்பே, வாலி ஆகிய திரைப்படங்கள் தான்.

ஹேமா, கண்ணம்மா வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்ட பாரதி? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

கேரளாவை சொந்த ஊராக கொண்ட நடிகை சுஜிதா, திரைப்படத்துறையை சேர்ந்த தனுஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு தன்வின் என்ற ஒரு மகன் இருக்கிறார். இப்போது சீரியல்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நடிகை சுஜிதா தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாகும் ‘வத்தினம்மா’ ஆகிய சீரியல்களில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – செண்பகத்திற்கு கிப்ட் வாங்க செல்லும் ரோஜா!

குறிப்பாக, தமிழகத்தில் அண்ணி என்று சொன்னால் அனைவருக்கு நியாபகம் வரும் அளவுக்கு சுஜிதா நடித்து வரும் தனம் கதாப்பாத்திரம் அதிகமாக பேசப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது 37 வயதாகி இருக்கும் நடிகை சுஜிதாவுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் இன்று தனது திருமண நாளை கொண்டாடி வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக சுஜிதா மற்றும் தனுஷ் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!