பிக் பாஸ் சீசன் 5: ப்ரியங்காவிற்கு செம டோஸ் விடும் உலக நாயகன் – இன்றைய ப்ரோமோ!
வார இறுதி நாட்களில் உலக நாயகன் கமல் வரும் எபிசோட்களுக்கு பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகளில் பலத்த எதிர்பார்ப்புகள் இருக்கும். அந்த வகையில் இன்று ப்ரியங்காவை நோக்கி கேள்விகளை எழுப்பியுள்ளது போல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.
பிக் பாஸ் சீசன் 5:
தொடர்ந்து 4 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக 5 வது வருடம் புதிய சீசனில் அடி எடுத்து வைத்திருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் அதிக எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. அதிலும், சனிக்கிழமையான இன்று உலகநாயகன் கமல் ஹாசன் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுவதும் நடந்த விஷயங்களை பற்றி போட்டியாளர்களுடன் விவாதிப்பார். அதனால் எப்போது கமல் வரும் எபிசோட்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை சுஜிதாவின் திருமணநாள் கொண்டாட்டம் – வாழ்த்தும் ரசிகர்கள்!
இந்த வாரத்தில் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. அதற்காக பஞ்சபூதங்களை பிரதிபலிக்கும் வகையில் 5 நாணயங்கள் வழங்கப்பட்டு அவற்றை யார் கைப்பற்றுகிறார்கள் என்பது போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. அதனால், இந்த வாரம் முழுவதும் நிகழ்ச்சி மிகவும் கலகலப்பாக சென்றது. இதற்கு இடையில் பல சண்டைகள் மற்றும் சச்சரவுகளும் வழக்கம் போல் போய் கொண்டிருந்தது. அதிலும், அக்ஷரா கழிப்பறை வழியாக புகார்களை எழுதி அனுப்புவதாகவும் புகார்கள் வந்தது.
ஹேமா, கண்ணம்மா வீட்டில் இருப்பதை தெரிந்து கொண்ட பாரதி? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
இது தொடர்பாக, ப்ரியங்கா அக்ஷராவை மிகவும் காரசாரமாக விமர்சித்து வந்தார். அதனால் அக்ஷரா அழுது கண்ணீர் வடிக்கும் கட்சிகளும் வந்தது. இன்றைய ப்ரோமோவில், கமல் பிரியங்காவிடம் அக்ஷராவை விமர்சித்தது குறித்து கேட்கிறார். அதற்கு ப்ரியங்கா ஏதோ விளக்கம் கொடுக்க முயலும், போது அஷ்ராவிற்கு மட்டுமில்லை இங்கு அனைவருமே விதிகள் பொதுவானது என்று கூறுகிறார்.