
உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் உள்ளதா..? அப்போ உடனே இதை செய்யுங்க.. இல்லையென்றால் அபராதம் உறுதி..
வங்கிக் கணக்கு என்பது ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் உங்கள் பணத்தைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கவும், தேவைப்படும்போது அதை அணுகவும் உங்களை அனுமதிக்க கூடிய ஒரு நிதிக் கணக்காகும். மேலும், ஒரு வங்கிக் கணக்கு ATM, நெட் பேங்கிங் மூலம் வசதியான பணம் அணுகல், பில் செலுத்துதல்களை எளிதாக்குதல் மற்றும் சேமிப்புக் கணக்கிற்கு வட்டி வழங்குதல் போன்ற பல்வேறு வங்கி சேவைகளை அணுக உதவுகிறது. இந்நிலையில் வங்கி கணக்குகள் குறித்து முக்கிய என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, “ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிமுறையின் படி, ஒரு நபரின் பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால் அந்தக் கணக்கின் மூலம் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மோசடி மற்றும் திருட்டு போன்ற நிகழ்வுகளை குறைக்க எடுக்கபட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தள்ளது. மேலும், அபராதம் விதித்த பணம் செலுத்த தவறினால் வங்கிகள் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கபடலாம்” என்று கூறப்படுகிறது. இது போன்ற பிரச்சனையிலிருந்து விடுபட, உங்களது கணக்கு பதிவுகளை சரியான முறையில் நிர்வகிக்க கூறி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

























