
வீட்டிலிருந்தே ஆன்லைனில் பட்டா மாறுதல் செய்யணுமா…?? அப்போ உடனே இந்த தமிழ்நாடு அரசின் திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க
பொதுவாக பட்டா மாறுதல் செய்ய வேண்டும் என்றால், இ -சேவை மையத்திற்கோ அல்லது தாலுகா அலுவலகத்திற்கோ சென்று தான் மாற்ற முடியும். ஆனால், தற்போது வீட்டிலிருந்தே ஆன்லைன் முறையில் பட்டா மாறுதல் செய்யும் முறையை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதாவது, தமிழ்நாடு அரசின் https://tamilnilam.tn.gov.in/
இதையடுத்து, உட்பிரிவற்ற பட்டா மாறுதல் மற்றும் உட்பிரிவுள்ள பட்டா மாறுதல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின், நிலம் உங்களுக்கு சொந்தமானதா என்பதை உறுதி செய்ய, கிரைய பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உட்பிரிவற்ற பட்டா மாறுதலுக்கு 60 ரூபாய் மற்றும் உட்பிரிவுள்ள பட்டா மாறுதலுக்கு 460 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். அதன்பின், உங்களது விண்ணப்பம் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அனுப்பப்பட்டு, பின் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் விசாரணை நடத்தி பட்டா மாறுதல் செய்யப்படும்.

























