
RBI-ன் புதிய கவர்னர் இவர் தானா..?? ” எப்போது பதவி ஏற்கிறார் தெரியுமா”?? “இதோ முழு தகவலுடன் உள்ளே”..!!
நாட்டின் பொருளாதார நிதி சார்ந்த முக்கிய முடிவுகளை RBI தீர்மானிக்கிறது. மேலும், ரிசர்வ் வங்கி தலைவரின் முடிவுகளை பொறுத்தே பொருளாதார வட்டி விகிதங்கள் இருக்கும். அதன்படி, கடந்த 2018 ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி RBI கவர்னராக “சக்திகாந்த தாஸ்” நியமிக்கப்பட்டார். மேலும், இவரின் பதவிக்காலம் 2021 ஆம் ஆண்டில் நிறைவு பெறுவதாக இருந்ததை, மேலும் 3 ஆண்டுகள் நீட்டித்து இந்திய அரசு உத்தரவிட்டது. அந்த வகையில், தற்போது RBI ஆளுநராக பணியாற்றி வரும் சக்திகாந்த தாஸின் பதவி காலம் இன்றுடன் (10.12.2024) நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து, RBI கவர்னர் பதவிக்கு டிசம்பர் 11ம் தேதியன்று புதிய ஆளுநர் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, வருவாய் துறை செயலாளராக பணியாற்றி வரும் “சஞ்சய் மல்ஹோத்ரா”, தற்போது RBI கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் டிசம்பர் 11ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவியேற்கிறது. மேலும், 3 ஆண்டுகள் இப்பதவியில் செயலாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Sir