ரிசர்வ் வங்கி ரெப்போ (REPO) வட்டி விகிதம் மாற்றம்? ஆளுநர் விளக்கம்!
இந்தியாவில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன் வட்டி விகிதம் ரெப்போ வட்டி 4 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் 2021-2022 ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.5% இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி:
இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் அனைத்து வணிக நிறுவனங்களும் இயங்க அரசு தடை விதித்தது. பொது மக்களும் தங்கள் வேலைகளை இழந்து பொருளாதார நெருக்க நிலையை சந்தித்தனர். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடன் தவணையை திரும்பி செலுத்த முடியாத நிலைக்கு ஆளாகினர். பெரும்பாலான தொழில்கள் கொரோனா ஊரடங்கால் முடங்கியது. இந்த நிலையை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி கடன் தவணையை திரும்ப செலுத்த நிறுவனங்களுக்கு கால அவகாசம் அளித்தது.
இனி 24 மணிநேரமும் வங்கிகளில் NACH வசதி – வாடிக்கையாளர்கள் நிம்மதி!
கொரோனா நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற 6.85 வட்டி வீதத்தில் ரூபாய் 5 லட்சம் வரை கடன் பெறும் வாய்ப்பையும் வழங்கியது. மேலும் இந்த வருடம் ரிசர்வ் வங்கி ரூ.25 கோடி வரையில் கடன் பெற்ற தனிநபர்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் கடன் தவணையை செலுத்த கால அவகாசமும், சில சலுகைகளையும் அறிவித்தது. கடன் தவணை சலுகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
அதனை தொடர்ந்து இந்தியாவில் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3 சதவீதமாகவும் தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மேலும் நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் எனவும், 2022-2023 ம் ஆண்டுகளில் நாட்டின் பணவீக்கம் 5.1% இருக்கலாம் எனவும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளதாக ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.