இனி 24 மணிநேரமும் வங்கிகளில் NACH வசதி – வாடிக்கையாளர்கள் நிம்மதி!
நாளுக்கு நாள் செக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களின் நலனுக்காக 24 மணி நேரமும் செக் கிளியரிங் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விடுமுறை நாட்களிலும் செக் பரிவர்த்தனை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது நிம்மதி அளிப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செக் கிளியரிங் வசதி:
வங்கிகளில் அதிகமான பண பரிவர்த்தனைகளுக்கு செக் பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது செக் கிளியரிங் வசதி 24 மணி நேரம் செயல்படும் வகையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. காசோலை மூலம் பண பரிவர்த்தனைகளுக்கு பல்வேறு விதிமுறைகள் இருந்து வந்த நிலையில் வங்கி வேலை நாட்களில் மட்டுமே காசோலை பரிவர்த்தனை செய்யும் வசதி அமலில் இருந்தது. தற்போது மக்கள் அதிகமாக செக் பயன்படுத்தி வருவதனால் அவர்களின் சிரமத்தை குறைப்பதற்காக 24 மணி நேரமும் காசோலை பரிவர்த்தனை செய்யும் நடைமுறை ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்பட்டது.
பொறியியல் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10 முதல் விண்ணப்பிக்கலாம்!
இந்த திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் 24 மணி நேரம் அதாவது வங்கியின் விடுமுறை நாட்களில் கூட செக் பரிவர்த்தனை நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வங்கிகளில் செக் கிளியரிங் வசதி 24 மணி நேரமும் நடைபெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டமானது இந்த மாதம் நடைமுறைக்கு வரும் எனவும் கூறப்பட்டது. இதனை தொடர்நது செக் வழங்குபவர்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
TN Job “FB
Group” Join Now
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்ட மற்றும் நடைமுறைப்படுத்தவுள்ள திட்டத்தின் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் செக் வழங்கும் முன் தங்கள் வங்கி கணக்கில் தேவையான பணம் இருப்பதை உறுதி செய்து பின்னர் வழங்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு உறுதி செய்ய தவறி செக் பவுன்ஸ் ஆகும் பட்சத்தில் அதற்கான அபராத தொகையை வழங்குவதும் அவசியமாகிறது. தற்போது 24 மணி நேரமும் செக் பரிவர்த்தனை வசதி அமலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.