முன்னேற்றத்தின் வழிகாட்டி.. ரத்தன் டாடாவின் வெற்றி கதை.. கனவுகளை நிஜமாக்கிய தலைவர்!!
மக்கள் சமையலில் பயன்படுத்தப்படும் உப்பு முதல் வங்கிகளில் பயன்படுத்தும் மென்பொருள் வரை அனைத்து விதமான பொருட்களையும் தயாரித்து பல நாடுகளில் டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர் ரத்தன் டாடா. இவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக மட்டுமல்லாமல், ஒரு நல்ல மனிதராகவும் வாழ்ந்தவர். மனிதர்கள் மீது மட்டுமன்றி விலங்குகள் மீதும் அளவற்ற அன்பு கொண்டிருந்தவர். மேலும், சிறந்த தலைவனுக்கு உதாரணமாக வாழ்ந்தார். இந்நிலையில் இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து இந்த பதிவில் காணலாம்
கதை அல்ல வரலாறு:
- 1937 – நேவல் டாடாவிற்கும் சூனி டாடாவிற்கும் பிறந்தார்.
- 1962- டாடா ஸ்டீல் மூலம் டாடா குழுமத்தில் இணைந்தார்.
- 1991-ஜே.ஆர்.டி.டாடாவிடம் இருந்து டாடா குழுமத் தலைவர் பொறுப்பை ஏற்றார். பல புதிய நிறுவனத்தின் மூலம் வருமானத்தை 10 மடங்கு உயர்த்தினார்.
- 2000 – பத்ம பூஷன் விருதை பெற்றார்
- 2008 – பத்ம விபூஷன் விருதை பெற்றார்.
- 2012 – 75வது பிறந்தநாளில் டாடா குழுமத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
ரத்தன் டாடா மறைவு.. கண்ணீர் கடலில் மக்கள் .. இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்!!
இந்தியாவின் Bharat Ratna:
இந்தியாவில் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி, அதானி போன்றவர்கள் முன்னணியில் உள்ளனர். ஆனால் நீங்கள் என்றாவது ஏன் ரத்தன் டாடா இந்த பட்டியலில் இல்லை என யோசித்தது உண்டா. நிஜத்தில் டாடா, அவர்களை விட பணக்காரர் தான். ஆனால் அவரின் 80% சொத்துகளை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என குரல் எழுந்தபோது இந்தியனாக இருப்பதே தனது அதிர்ஷ்டம் என தெரிவித்தார். இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தன் டாடாவின் பொன்மொழிகள் :
ரத்தன் டாடாவின் அசுர வளர்ச்சிக்கு அவரின் அசாத்திய துணிச்சலும், அபார தன்னம்பிக்கையுமே காரணம். அவரது சில பொன்மொழிகள் ‘சரியான முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை’. ‘நான் முடிவுகளை எடுக்கிறேன்’ ‘பின்னர் அவற்றை சரிசெய்வேன்’. ‘ரிஸ்க் எடுக்காததுதான் பலர் வாழ்க்கையில் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க்’. ‘வேகமாக செல்ல விரும்பினால், தனியே செல்லுங்கள்; நீண்டதூரம் செல்ல விரும்பினால் சேர்ந்து செல்லுங்கள்’. ‘வாழ்வின் ஏற்ற இறக்கமே நம்மை முன்னுக்கு கொண்டு செல்லும்’. ‘ECG-இல் கோடு நேராக இருந்தால் நாம் இறந்ததாக அர்த்தம்’.
உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்:
டாடா குழுமத்தின் துணை நிறுவனமான கல்வி மற்றும் மேம்பாட்டு அறக்கட்டளை, கார்னெல் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய இளங்கலை மாணவர்களுக்கு $28 நிதி உதவியை வழங்கியுள்ளது. மேலும் டாடா குரூப்ஸ் கல்வி, மருத்துவம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.



























