காதலர் தினத்தில் கணவர் பெயரை நீக்கிய ரஜினிகாந்த் மகள் – ரசிகர்கள் ஷாக்!

0
காதலர் தினத்தில் கணவர் பெயரை நீக்கிய ரஜினிகாந்த் மகள் - ரசிகர்கள் ஷாக்!
காதலர் தினத்தில் கணவர் பெயரை நீக்கிய ரஜினிகாந்த் மகள் - ரசிகர்கள் ஷாக்!
காதலர் தினத்தில் கணவர் பெயரை நீக்கிய ரஜினிகாந்த் மகள் – ரசிகர்கள் ஷாக்!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா, நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவர் பெயரை நீக்கி தன்னுடைய ஆல்பம் பாடல் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

முன்னணி நடிகர்களின் ஒருவரான தனுஷ் தன்னுடைய 18 வருட காதல் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களை கடந்த மாதம் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார். ஆனால் இந்த பிரிவு குறித்து இருவரும் எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை. அவர்களின் இரண்டு மகன்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரும் சேர வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உயர்வு!

மேலும் இருவரின் குடும்பமும் இவர்களுக்கு இடையே இருப்பது சிறு சண்டை தான் எனவும் இருவரும் விரைவில் சேர்ந்து விடுவார்கள் என நம்பிக்கையுடன் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று உலகளவில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தயாரித்த ஆல்பம் பாடம் ப்ரோமோ ஒன்று வெளியானது அதில் உருவாக்கம் மற்றும் இயக்கம் என கொடுக்கப்பட்டது. அதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என இருந்தது.

தமிழகத்தில் அறிவித்தபடி 10, 12ம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வு – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

இதுவரை ஐஸ்வர்யா தயாரித்த படங்களில் அவருடைய கணவரின் பெயரும் சேர்த்து தான் வரும். ஆனால் தற்போது கணவர் பெயர் நீக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் அவர் சமூக வலைத்தளங்களில் இன்னும் கணவர் பெயரை வைத்து ஐஸ்வர்யா ஆர் தனுஷ் என வைத்திருக்கிறார். இந்த ஆல்பம் பாடலுக்காக தான் ஐஸ்வர்யா ஹைதராபாத் சென்றார். அங்கே தான் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ப்ரோமோவை ஷேர் செய்த அவர் நான் என்ன சொல்வது, கடவுள் வழிகாட்டுவார் என பதிவிட்டு இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!