
IPL 2025 CSK vs RR : போட்டியை தன்வசப்படுத்திய ராஜஸ்தான்.. ஹசரங்காவின் அதிரடி பந்துவீச்சு.. மீண்டும் தடுமாற்றத்தில் சென்னை அணி..
2025 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் 11-வது லீக் போட்டி கவுகாத்தியில் நேற்று (30-03-2025) நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டிக்கான டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி “முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது”.
இப்போட்டியில் “ராஜஸ்தான் சார்பில் நிதிஷ் ராணா (81), கேப்டன் ரியான் பராக் (37) ஆகியோர் ஆகியோர் அதிகபட்ச ரன்கள் எடுத்தனர். மறுபுறம் சென்னை சார்பில் ராகுல் திரிபாதி (23), ஷிவம் துபே (18), கேப்டன் ருத்ராஜ் (50), ஜடேஜா (32), தோனி (16) ஆகியோர் ஆகியோர் அதிகபட்ச ரன்கள் குவித்தனர்”. மேலும், “CSK அணியின் சார்பில் சார்பில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதை தொடர்ந்து, RR தரப்பில் ஹசரங்கா சென்னை அணியின் முக்கியமான 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்”. மேலும், “போட்டி தொடங்குவதற்கு முன்னதாக IPL சீசன் தொடங்கியது முதல் கடந்த 18 ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வரும் தோனியை கவுரவிக்கும் வகையில் BCCI சார்பில் செயலாளர் தேவஜித் சைக்கியா நினைவு பரிசு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது”.


























