
Today Gold Rate: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை அதிரடி உயர்வு…!! இதோ முழு விவரம் உங்களுக்காக
நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், இந்த பண்டிகை நாளில் தங்க நகைகள் உள்ளிட்ட பரிசு பொருட்களை வாங்கி, ஒருவருக்கொருவர் அன்பாக பரிமாறிக்கொள்வது வழக்கம். அதுபோன்று, தங்க நகைகளை வாங்க நினைப்பவர்களுக்கு தற்போது அதிர்ச்சி அளிக்கும் விதமாக, இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அந்தவகையில், இன்று (31.02.2025) விற்பனையாகும் ஆபரண தங்கத்தின் விலை நிலவரம் பற்றி கீழே விரிவாக காண்போம்.
அதாவது, இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ. 520 உயர்ந்து 1 சவரன் ரூ. 67,400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், 1 கிராம் 8,425 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி 1 கிலோ ரூ. 1,12,900 ஆகவும், 1 கிராம் ரூ. 112.90 ஆகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


























