அட கடவுளே.. இது என்ன கொடுமை.. கோபியை மணமுடித்து நெற்றியில் குங்குமத்துடன் ராதிகா வெளியிட்ட பதிவு!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பல சிக்கல்களுக்கு நடுவே ராதிகா கோபி திருமணம் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்து நெற்றியில் குங்குமத்துடன் ராதிகா மயூவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் பல ட்விஸ்ட்களுடன் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. ராதிகாவும் கோபியும் திருமண கோலத்தில் இருக்க, அதை பார்க்காமல் பாக்கியா தன்னுடைய சமையல் வேலையை கவனித்து வருகிறார். இந்நிலையில் பாக்கியாவை மயூ பார்த்துவிட இது என்னுடைய அம்மாவின் கல்யாணம் என உண்மையை சொல்லிவிடுகிறாள் மயூ. அதை கேட்டு பாக்கியா அதிர்ச்சி அடைய, செல்வி மணமக்களை பார்த்து கடுப்பாகி சண்டை போடுகிறார்.
ஆனால் கோபி அவர்களை வெளியே போக சொல்ல, மண்டபம் மேனேஜர் அதெல்லாம் முடியாது என சொல்கிறார். மறுபக்கம் ராமமூர்த்தி மண்டபத்தை தேடி அலைந்து, இறுதியாக கண்டுபிடிக்கிறார். அப்போது கோபியை பார்த்து இந்த வயசில் நீ செய்யும் காரியம் ரொம்ப தவறானது என சொல்ல, கோபி நான் அப்படி தான் செய்வேன் என சொல்கிறார். இப்படி எல்லாருடைய கண்ணீருக்கும் காரணமாக இருந்துவிட்டு நீ நன்றாக இருக்கமாட்டாய் என ராமமூர்த்தி சொல்ல, கோபி அவரை வெளியே போக சொல்கிறார்.
Heroine ரோலில் மாஸாக சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ள பிரபல சின்னத்திரை நடிகை – ஆர்வத்தில் ரசிகர்கள்!
Exams Daily Mobile App Download
பின் பாக்கியா ராமமூர்த்தியை தனியாக அழைத்து பேசுகிறார். எனக்கு இந்த சமையல் ஆர்டர் மிகவும் முக்கியம் என பாக்கியா சொல்கிறார். பின் பாக்கியா எந்த பிரச்சனையும் செய்யாமல் இருக்க, திட்டமிட்டபடி கோபி ராதிகாவின் கல்யாணம் நடந்து முடிகிறது. திருமணம் முடிந்து புது பெண்ணாக ராதிகா மயூ உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் நெற்றியில் குங்குமத்துடன் ராதிகா இருக்கிறார். அதனால் இனி கதை எப்படி செல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
பாக்யா ஏதாவது விபத்தில் இறப்பது மாதிரி கதையை முடித்துவிடலாம்…