புரோ கபடி லீக் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் பெங்களுரூ – தெலுங்கு டைட்டன்ஸ் பலப்பரீட்சை!!
புரோ கபடி லீக் தொடரின் 11வது சீசன் இன்று (அக்டோபர் 18) முதல் தொடங்குகிறது. இத்தொடரில் புனேரி பல்தான், முன்னாள் சாம்பியன்கள் பாட்னா பைரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா, பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், தபாங் டெல்லி மற்றும் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யுபி யோதாஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஹைதராபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் தொடக்க போட்டியில், பெங்களுரூ புல்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் டெல்லி -மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


























