ஜூலை 16 முதல் தனியார் பள்ளிகள் திறப்பு – ராஜஸ்தான் அரசுக்கு கடிதம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு அறிவிக்காத பட்சத்தில், தனியார் பள்ளிகள் ஜூலை 16ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை துவங்க முடிவு செய்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா நோய் தினசரி பாதிப்புகள் குறைந்து வருவதால், மால்கள், சந்தைகள் மற்றும் தனியார் அலுவலகங்கள் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குறைந்து வரும் பாதிப்பு நிலவரத்தில் நேற்றைய நிலவரப்படி 51 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. மாநிலத்தில் தற்போது 1000 க்கும் குறைவான நபர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதனால் அரசு பல தளர்வுகளை அறிவித்து வருகிறது.
தமிழக உறுப்புக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – கல்லூரி கல்வி இயக்ககம் விளக்கம்!
இருப்பினும் பள்ளிகள் திறப்பது பற்றிய அறிவிப்பை முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் வெளியிடவில்லை. இதனால், ராஜஸ்தான் பள்ளி ஷிக்ஷா பரிவார் தலைவர் அனில் சர்மா முதல்வர் அசோக் கெஹ்லோட்டுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ஜூலை 16 முதல் மாநில அரசு பள்ளிகளை மீண்டும் திறக்கவில்லை என்றால், தனியார் பள்ளிகள் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளை சொந்த முடிவில் தொடங்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
தொடர்ச்சியான ஊரடங்கு உத்தரவு காரணமாக தனியார் பள்ளிகளின் நிதி நிலை மோசமாகியுள்ளது. இதற்கு மேலும் கல்வி நிறுவனங்கள் மூடப்படாது என்றும் தெரிவித்துள்ளார். கிராமப்புற மாணவர்களின் நலனுக்காகவும், பெற்றோரின் அனுமதியுடனும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 50% எண்ணிக்கையிலான நேரடி வகுப்புகளை கொரோனா நெறிமுறையைப் பின்பற்றி ஜூலை 16 முதல் தொடங்க முடிவு செய்துள்ளதாவும், அரசு விரும்பினால், அவர்கள் என்னைக் கைது செய்யலாம் என்றும், இது 40,000 தனியார் பள்ளிகளின் ஒருமித்த கருத்து என்றும் தெரிவித்துள்ளார்.
TN Job “FB
Group” Join Now
இணையம் மற்றும் டிஜிட்டல் கல்விக்கு கட்டாய வசதிகள் இல்லாததால் கிராமப்புற குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாததால் பள்ளிகளை மீண்டும் திறப்பது அவசியமாகியுள்ளது. நேரடி வகுப்புகளின் போது தனியார் பள்ளிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் சர்மா தெரிவித்துள்ளார்.