வாரம் ஒரு நாள் இலவசமாக மதுபானங்கள் வழங்கல் – மாநில அரசு திட்டம்!
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மதுபான கடைகளில் விற்பனை குறைந்துள்ளதால் அதனை அதிகரிக்கும் நோக்கில் வாரம் ஒரு நாள் இலவசமாக மதுபானங்கள் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலவச மதுபானம்:
நாடு முழுவதும் மாநில அரசு சார்பில் மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அனைத்து மாநில ரேஷன் கடைகளிலும் அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற உணவு பொருள்கள் மலிவு விலையில் ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்படுவது வழக்கம். அதற்கு மேல் தமிழக அரசு இலவச டிவி, மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆடுகள் போன்றவற்றை இலவசமாக வழங்கி உள்ளது.
ஜூலை 16 முதல் தனியார் பள்ளிகள் திறப்பு – ராஜஸ்தான் அரசுக்கு கடிதம்!
மேலும் மாணவர்கள் நலனுக்காக இலவச பாடப்புத்தகம், காலணி, மடிக்கணினி, சைக்கிள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தெலுங்கானா அரசு ஒரு புதிய இலவச பொருள் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதாவது மதுபானங்களை இலவசமாக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலமாக தெலுங்கானா இருந்தது.
TN Job “FB
Group” Join Now
அதனால் பல மாதங்களாக கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக மதுபான விற்பனை குறைந்துள்ளது. இதனால் அரசின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் இவ்வாறு திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அரசு உரிமம் பெற்ற மதுக்கடைகளில் வாரம் ஒரு நாள் இலவசமாக மதுபானங்கள் வழங்கவும் எனவும், கூட்ட நெரிசலை தவிர்க்க இதற்காக டோக்கன் வழங்கவும் என திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.