
முதன்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர்..!! முழு விவரம் உள்ளே…!!
கடந்த ஏப்ரல் 22 தேதி காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் பகுதியில் தீவிரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் பரிதமாக 26 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி தரும் விதமாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நுழைந்து, தீவிரவாதிகள் முகாமிட்டுள்ள 9 முகாம்களை துல்லியமாக தாக்கி தரைமட்டமாக்கியது. இதில் பல்வேறு முக்கிய தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
நீங்க JEE தேர்வில்லாம சென்னை IIT-யில் படிக்கணுமா..? அப்போ இத உடனே பண்ணுங்க…!!
மேலும், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் தணிந்த பின்னும், தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் தொடர்வதாக நேற்று இந்திய விமான படை அறிவித்தது. இந்நிலையில், முதல்முறையாக இன்று இரவு 8 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், எல்லை நிலவரம், ஆபரேஷன் சிந்தூரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.























