உங்க EPF பாஸ்புக் பாஸ்வேட் மறந்துருச்சா..? அப்போ உடனே இத பண்ணுங்க..!! இல்ல ஆபத்தாகிரும்..!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) என்பது ஊழியர்களின் சேமிப்பு, பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றை நிர்வகிக்கும் ஓர் ஓங்கிணைந்த அமைப்பாகும். இதன் கீழ் உள்ள ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் EPF பாஸ்புக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் உறுப்பினர்கள் தாமாகவே தங்களுடையே PF கணக்கிலுள்ள பண விவரங்களை அறிந்துகொள்ள முடியும். மேலும், EPF கணக்கை எப்போது வேண்டுமானாலும் பார்வையிடுவதற்கு பாஸ்வேட் என்பது மிகவும் அவசியமாகும். இந்நிலையில் இந்த பாஸ்வேட்டை மறந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கீழே விரிவாக காண்போம்.
முதன்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர்..!! முழு விவரம் உள்ளே…!!
அதாவது, நீங்கள் முதலில் https://www.epfindia.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும். அங்கு, “Forget Password” என்பதை கிளிக் செய்து, உங்கள் UAN எண்ணை உள்ளிட்டு Verify செய்யவும். பின், அதில் கேட்கப்படும் விவரங்களை பூரித்தி செய்த பின்னர், உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். அதனை அப்ளை செய்த பிறகு, நீங்கள் விரும்பும் புதிய Password-ஐ இரண்டு முறை உள்ளிடவும். இப்போது உங்கள் புதிய Password உறுதி செய்யப்பட்டு இருக்கும். இப்போது, இந்த Password-ஐ பயன்படுத்தி உங்கள் EPF Account-ஐ Login செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.


























