Airtel நிறுவனத்தின் ரூ.300க்கும் கீழ் குறைந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

0
Airtel நிறுவனத்தின் ரூ.300க்கும் கீழ் குறைந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரம் இதோ!
Airtel நிறுவனத்தின் ரூ.300க்கும் கீழ் குறைந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் - முழு விபரம் இதோ!
Airtel நிறுவனத்தின் ரூ.300க்கும் கீழ் குறைந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் – முழு விபரம் இதோ!

நாட்டின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் முன்னதாக குறைந்த விலையில் அதிக சலுகைகளை வழங்கி வந்த நிலையில், தற்போது அதிரடியாக ப்ரீபெய்டு திட்டங்களின் விலையினை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் ரூ.300 க்குள் கிடைக்கும் ப்ரீபெய்டு திட்டங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.

ப்ரீபெய்டு திட்டங்கள்:

கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் அனைத்து தொலை தொடர்பு நிறுவனங்களும் மக்களுக்கு குறைந்த விலையில், அதிக சேவைகளை வழங்கி வந்தது. மேலும், கூடுதலாக பல ஓடிடி தளங்களுக்கான சந்தாவையும் இலவசமாக வழங்கி வந்தது. இதனால் சலுகைகளை பார்த்து அதிக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வசதியான நிறுவனங்களுக்கு மாறி வந்தனர். இந்நிலையில், ஏர்டெல் நிறுவனம் அதிரடியாக தனது நிறுவனத்தின் ப்ரீபெய்டு திட்டங்களின் விலையினை உயர்த்தி உள்ளது. இதன் மூலம் 5G மொபைல் சேவைகளில் முதலீட்டினை அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்நிலையில், விலை உயர்த்தப்பட்டுள்ள போதிலும் ரூ.300க்குள் உள்ள ப்ரீபெய்டு திட்டங்களை பற்றிய முக்கிய விவரங்கள் அனைத்தும் இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.155 திட்டம்:

இந்த திட்டத்தின் மூலம் அன்லிமிடெட் கால்கள், 24 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இதனுடன் மொத்தம் 1ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனுடன் மொத்தம் 300 எஸ்எம்எஸ் மற்றும் Amazon Primeக்கான இலவச ட்ரையலை பெறலாம்.

ரூ.179 திட்டம்:

ரூ.179 ஏர்டெல் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் இலவச கால்கள் மற்றும் மேசான் பிரைம் வீடியோவின் இலவச ட்ரையலுக்கான சந்தா மற்றும் மொத்தம் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக மொத்தம் 300 எஸ்எம்எஸ் வசதியினையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த இரண்டு திட்டங்களிலும் 300 எஸ்எம்எஸ்களுக்கு பிறகு ஒவ்வொரு எஸ்எம்எஸ்க்கும் ரூ.1 கட்டணமாக வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மூடல்? ஓமிக்ரான் வைரஸால் பெற்றோர்கள் கோரிக்கை!

ரூ.239 திட்டம்:

ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா 24 நாட்கள் வேலிடிட்டியில் கிடைக்கிறது. Amazon Prime வீடியோவின் இலவச ட்ரையல் மற்றும் Wynk Musicக்கான இலவச அணுகலும் கிடைக்கிறது.

ரூ.265 திட்டம்:

ரூ.265 க்கு ரீசார்ஜ் திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், கூடுதலாக Amazon Prime வீடியோவின் இலவச ட்ரையல் மற்றும் Wynk Musicக்கான இலவச அணுகலும் கிடைக்கிறது.

ரூ.299 திட்டம்:

ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மொத்தம் 28 நாட்களுக்கு கிடைக்கிறது. கூடுதலாக mazon Prime வீடியோவின் இலவச ட்ரையல் மற்றும் Wynk Musicக்கான இலவச அணுகலுடன் ஷா அகாடமிக்கான அணுகல் மற்றும் இலவச ஹெலோட்யூன்கள் போன்ற சில கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!