தமிழகத்தில் அக். 7 இந்த பகுதிகளில் மின்தடை – பொதுமக்களே அலர்ட்!

0
தமிழகத்தில் அக். 7 இந்த பகுதிகளில் மின்தடை - பொதுமக்களே அலர்ட்!
தமிழகத்தில் அக். 7 இந்த பகுதிகளில் மின்தடை - பொதுமக்களே அலர்ட்!
தமிழகத்தில் அக். 7 இந்த பகுதிகளில் மின்தடை – பொதுமக்களே அலர்ட்!

 

தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்பதால் துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற அக். 7 ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

மின்தடை பகுதிகள்

தமிழகத்தில் இயங்கி வரும் துறைகளில் முக்கியமான துறையாக மின்சார துறை இருக்கிறது. அடிப்படை தேவைகளில் ஒன்றாக மின்சாரம் இருப்பதால், இந்த துறை 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. அதனால் சேவைகளில் தொய்வு ஏற்படாமல் இருக்க, மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின்சார பராமரிப்பு பணிகள் நடத்தப்படுகிறது. அவ்வாறு மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அந்த வகையில், மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்களை முன் கூட்டியே மின்சார வாரியம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் வருகிற அக். 7 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் காலை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்.10ம் தேதி பள்ளிகளை திறக்க உத்தரவு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

Exams Daily Mobile App Download

அதன் படி, விளாத்திகுளம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட மந்திகுளம், செங்கல்படை, பிள்ளையார்நத்தம், பேரிலோவன்பட்டி, செங்கல்படை, கமலாபுரம், அயன்பொம்மையாபுரம், விளாத்திகுளம், ராமச்சந்திராபுரம் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும், குளத்தூர் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட வேப்பலோடை, குளத்தூர், கீழவைப்பார், வைப்பார், மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் ஆகிய பகுதிகளிலும், சூரங்குடி துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம், மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!