Post Office இல் ரூ.1500 முதலீடு செய்தால் 4.5 லட்சம் வரை ரிட்டன்ஸ் – மாதாந்திர வருமான திட்டம்!
இந்திய அஞ்சல் துறை பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் குறிப்பாக மாதாந்திர வருமான திட்டம் ஒன்றை வைத்துள்ளது. இதன் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக வட்டியை பெறலாம்.
மாதாந்திர வருமான திட்டம்:
தற்போது கொரோனா கால கட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றன. இதனால் தங்கள் தங்களுக்கு என்று பாதுகாப்பான முதலீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் Post Office-ல் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளன. தற்போது இருக்கும் சூழலில் சேமிப்பு மட்டுமே போதாது அதையும் தாண்டி நல்ல பலன் தரும் சில திட்டங்கள் இருக்கின்றன. அவைகளாவன தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (போசோ), 5 ஆண்டு தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைப்பு கணக்கு (ஆர்.டி), தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு (TD), தபால் அலுவலக மாத வருமான திட்ட கணக்கு (எம்ஐஎஸ்), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) உள்ளிட்ட பல திட்டங்களை இந்திய அஞ்சல் துறை வழங்குகிறது.
TNPSC குரூப் 2, 2A தேர்வில் 5831 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு – பதவிகள், கல்வித்தகுதி!
மேலும் மாதந்தோறும் வருவாயை பெறும் வகையில் மாதாந்திர வருமான திட்டம் உள்ளது. இதன் மூலமாக குறைந்த அளவு முதலீடு செய்து மாதந்தோறும் வட்டி தொகையை பெற முடியும். இத்திட்டத்தில் தனிநபர் கணக்கு மூலமாக ரூ.4.5 லட்சம் வரை சேமிக்கலாம். அதே போல் கூட்டு கணக்கில் ரூ.9 லட்சம் வரை சேமிக்கலாம். அத்துடன் தனிநபர் கணக்கில் குறைந்தபட்ச தொகையாக ரூ 1,500 ரூபாய் முதல் முதலீடு செலுத்தினால் 4.5 லட்சம் வரை சேமிக்க முடியும். இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் 6.6% ஆகும். அத்துடன் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு இது ஒரு அருமையான திட்டமாகும்.
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அப்டேட் – வாய்ஸ் ரெக்கார்டுகளை அனுப்புவதற்கு முன் சோதிக்கும் முறை!
அதோடு வாழ்நாள் சேமிப்புக்கு இத்திட்டம் மிகவும் பாதுகாப்பானது. இத்திட்டத்தில் Simple interest மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலமாக கிடைக்கும் வட்டியானது திட்டத்தை தொடங்கிய தேதியிலிருந்து 1 மாதம் கழித்து கொடுக்கப்படுகிறது. இந்த வட்டி தொகையானது முதலீடு தொகை முதிர்ச்சி அடையும் வரை வழங்கப்படுகிறது. மேலும் வட்டி தொகையை மாதந்தோறும் எடுக்காவிட்டால் கூடுதல் வட்டி வழங்கப்பட மாட்டாது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெறுவதற்கு இந்திய தபால் துறையின் இணையதள பக்கத்தையோ அல்லது தபால் அலுவலகத்தையோ அணுகி அறிந்து கொள்ளலாம்.