த.வெ.க மாநாடு.. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே!!

0

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெற்று வருகிறது. தொண்டர்கள் வருகையால் மாநாட்டு திடல் முழுவதும் நிரம்பியுள்ளது. தொண்டர்கள் பல மணி நேரமாக கடும் வெயிலில் அமர்ந்துள்ளதால் விஜய் முன்கூட்டியே உரையாற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் அறிவிக்கப்ட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் :

  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதே தவெகவின் கோட்பாடு
  • மதச்சார்பற்ற சமூக நீதியே நமது கொள்கை
  • மதம், சாதி, பாலினம் என பிளவுப்படுத்தாமல் பிறப்பால் அனைவரும் சமமே
  • எல்லா நிலைகளிலும் ஆண்,பெண், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் சமம்
  • மாநில தன்னாட்சி உரிமை என்பது அந்தந்த மாநிலங்களின்சுயாட்சி உரிமை
  • தமிழ் மொழியில் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை
  • தமிழ், ஆங்கிலம் என இரு மொழி கொள்கையை தவெக பின்பற்றும்

JOIN WHATSAPP EXAMSDAILY TAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!