“இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயார்”.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு..!!

0
“???????????? ??????? ?????????????? ????? ?????”.. ?????????? ??????? ?????? ?????? ?????????..!!
“இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயார்”.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு..!!

“இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தயார்”.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு..!!

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி அதிகாலையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது இந்தியா துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. இதை தொடர்ந்து, மே 8 முதல் 10 வரை பாகிஸ்தான், இந்திய ராணுவத் தளங்களைத் தாக்கிய நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது. இதனால் மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டது.

மாணவர்கள் கவனத்திற்கு…!! பள்ளிகள் திறக்க லேட் ஆகுமா…? அமைச்சர் வெளியிட்டமுக்கிய தகவல்…!

இந்நிலையில் “பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள கம்ரா விமானப்படை தளத்தை நேரில் பார்வையிட்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளோம்” என்று தெரிவித்தார். மேலும், காஷ்மீர் விவகாரம் மற்றும் நதி நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய “இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து மட்டுமே பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!