“இந்த போர் நிறுத்தம் சிறிய இடைவெளி தான்”.. ஆபரேஷன் சிந்தூர் விமானப்படை தளத்தில் பிரதமர் அதிரடி பேச்சு..!!

0
"இந்த போர் நிறுத்தம் சிறிய இடைவெளி தான்".. ஆபரேஷன் சிந்தூர் விமானப்படை தளத்தில் பிரதமர் அதிரடி பேச்சு..!!
"இந்த போர் நிறுத்தம் சிறிய இடைவெளி தான்".. ஆபரேஷன் சிந்தூர் விமானப்படை தளத்தில் பிரதமர் அதிரடி பேச்சு..!!

“இந்த போர் நிறுத்தம் சிறிய இடைவெளி தான்”.. ஆபரேஷன் சிந்தூர் விமானப்படை தளத்தில் பிரதமர் அதிரடி பேச்சு..!! 

கடந்த மாதம் பஹல்காம் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. அதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியது. இந்த போர் பதற்றத்தை நமது ராணுவ வீரர்கள் கையாண்ட விதம் மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் போர் பதற்றம் ஓய்ந்ததை தொடர்ந்து இன்று (13-05-2025) பஞ்சாப் ஜலந்தரில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்தியாவிற்கு உறுதுணையாக இருந்த வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழகத்தில் வரும் மே 15 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. சற்று முன் வெளியான முக்கிய தகவல்..!!

அப்போது பேசிய பிரதமர் மோடி, “நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை நீங்கள் பழிவாங்கிவிட்டீர்கள். இந்தியா மீது கண் வைக்கும் பயங்கரவாதிகள் அழித்தொழிக்கப்படுவார்கள். எதிரிகள் மீண்டும் மீண்டும் முயன்றும் நமது பாதுகாப்பு அரணை தகர்க்க முடியவில்லை” என்று தெரிவித்தார். மேலும், தீவிரவாத முகாம்களை தாக்க வேண்டும் என்பதே இலக்கு, பாகிஸ்தானை அல்ல எனவும், இந்தியாவுடன் மோதினால் அழிவு மட்டுமே கிடைக்கும் என்பதை உணர்ந்துள்ளனர் என கூறினார். இதை தொடர்ந்து, “இந்த போர் நிறுத்தம் சிறிய இடைவெளி தான் பாகிஸ்தான் தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்” எனவும் எச்சரித்துள்ளார்.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!