புதிய குடும்ப அட்டை அப்ளை செய்துள்ளீர்களா..?? அப்போ இத மட்டும் பண்ணுங்க.. விவரம் உள்ளே.!!
தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தில் பயன்பெறவும், நலத்திட்டங்களின் சலுகைகளை கிடைக்கவும் ரேஷன் கார்டு மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. இந்த ரேஷன் கார்டு நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இதன் மூலம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குடும்பங்கள் குறித்த விவரங்களை அரசு சரிப்பார்த்து, திட்டங்களை செயல்படுத்தவும், ரேஷன் கார்டு உதவுகிறது. இந்த ரேஷன் கார்டை வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கவும், திருத்தங்கள் செய்யும் வசதியை அரசு வழங்குகிறது.
அதற்கு முதலில் https://tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு வாடிக்கையாளர்கள் செல்ல வேண்டும். பின்னர் ‘மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை’ என்ற ஆப்ஷனை பயனர்கள் கிளிக் செய்து உங்கள் குறிப்பு எண்ணை பதிவு செய்து உள்ளீடு செய்வதன் மூலம் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை காண முடியும். இதன் மூலம் விண்ணப்ப நிலையை பார்ப்பது மட்டுமல்லாமல், நகல் மின்னணு குடும்ப அட்டையை விண்ணப்பிப்பது, முகவரி மாற்றம் செய்வது, குடும்ப உறுப்பினரை நீக்குவது மற்றும் சேர்ப்பது உள்ளிட்ட சேவைகளை உங்கள் வீட்டிலிருந்தே செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the ExamsDaily Whatsapp Group


























