வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த பிரபல வங்கி.. எவ்வளவு சதவீதம் தெரியுமா..??
ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைக்கப்பட்டதை அடுத்து கடன்களுக்கான வட்டி விகிதங்களை பல்வேறு வங்கி குறைத்துள்ளன. அந்த வகையில் பேங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கி மே 5, 2025 அன்று வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கு பிறகு “பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் விட்டு கடனுக்கான வட்டி விகிதங்கள் ஓராண்டுக்கு 8.40 % இருந்த நிலையில் 8 % குறைக்கப்பட்டுள்ளது”. மேலும், இனி வரக்கூடிய புதிய வீட்டுக் கடன்கள் மற்றும் வீட்டை மேம்படுத்துவதற்கான கடன்கள் ஆகியவற்றிற்கு இந்தப் புதிய வட்டி விகிதங்கள் பொருந்தும் என்று BOB கூறியுள்ளது.
புதிய குடும்ப அட்டை அப்ளை செய்துள்ளீர்களா..?? அப்போ இத மட்டும் பண்ணுங்க.. விவரம் உள்ளே.!!
இதை தொடர்ந்து, “ரூ.15 லட்ச மற்றும் அதற்கும் அதிகமான தொகையை கடன் வாங்குபவர்களுக்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும், மற்றும் இந்த வட்டியானது கடன் பெறுபவரின் கிரெடிட் ஸ்கோரைப் பொறுத்து அமையும்” என்று மே 5, 2025 அன்று தெரிவித்துள்ளது. மேலும், “பெண்களுக்கு கூடுதலாக ஓராண்டுக்கு 0.05 % குறைவாகவும், 40 வயதிற்கு குறைவாக இருப்பவர்களுக்கு 0.10 % குறைவாகவும் கடன் வழங்கிறது”. இந்தக் கடன் விகிதங்கள் என்பது ஏற்கனவே தயார் நிலையில் உள்ள வீடுகள் மற்றும் ஹோம் லோன்களை டிரான்ஸ்ஃபர் செய்யப்படும் வசதிகள் போன்றவற்றிற்குப் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.


























