தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்.. தொடங்கி வைத்த பிரதமர் மோடி!!
மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையே தனது பயண சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே வாரியம் ஆனது மதுரை – பெங்களூர் மற்றும் நாகர்கோயில் – சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவைகளை இம்மாத இறுதியில் வழங்க உள்ளதாக தெரிவித்திருந்தது.
விரைவில் கைதாகிறாரா சீமான்?? வெளியான அதிர்ச்சி தகவல்!!
அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கும், மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் வந்தேபாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அவர் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். ” அதில், வந்தேபாரத் ரயில் மூலம் சுமார் 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பயணம். ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஏழு மடங்கு அதிகம் ” என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.



























