செப்டம்பர் மாதத்தில் இருந்து வர போகும் சில மாற்றங்கள் .! இதை தெரிஞ்சுக்க தவறாதீங்க ..!
நமது தமிழகத்தில் மக்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருட்களின் விலையில் சில மாற்றங்கள் ஏற்பட போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஆகஸ்ட் மாதம் முடிந்து செப்டம்பர் தொடங்க உள்ள நிலையில் மக்களின் நிதிநிலையில் நேரடியாக பாதிக்கும் வகையில் சில மாற்றங்களை ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் , ஆதார் கார்டு முதல் சிலிண்டரின் விலை வரை மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
6 மாற்றங்கள் :
1.ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும் . அதன் அடிப்படையில் தற்போது செப்டம்பர் மாதம் நிதிநிலை அறிக்கையின் படி விலையில் சில மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. LPG விலையுடன் சேர்ந்து எரிபொருள் மற்றும்,விமான விசை எரிபொருளின் விலையிலும்
மாற்றம் ஏற்பட போவதாக கூறப்படுகிறது.
3.மோசடி அழைப்புகளுக்கான விதிகளும் செப்டம்பர் மாதம் முதல் மாற்றி அமைக்க போவதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது, ஜியோ, ஏர்டெல் , ஐடியா, வோடபோன் போன்ற டெலிகாம் ஆப்ரேட்டர்களுக்கு TRAI கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, இதனால் சில மோசடிகள் தடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்.. தொடங்கி வைத்த பிரதமர் மோடி!!
4. கிரெடிட் கார்டுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதாவது, கிரெடிட் கார்டுகளில் செலுத்தப்படும் குறைந்தபட்ச கட்டணத்தை குறைத்து , பேமென்ட் காலத்தை 18 முதல் 15 நாட்களாக குறைக்கவும் IDFC வங்கி முடிவு செய்துள்ளது.
5. மத்திய அரசு தனது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அதிகரிக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளன.
6.தற்போது இந்தியாவில் ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 14 தேதி வரை நீட்டித்துள்ளது. மேலும் 14 தேதிக்கு மேல் ஆதார் அட்டையை புதுப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும்.



























