அரசு PM கிசான் திட்ட பயனாளிகளுக்கு ஹாப்பி நியூஸ் – 15வது தவணைத்தொகை வெளியீடு!
மத்திய அரசின் விவசாயிகளுக்கான கிசான் திட்டத்தின் 15 வது தவணை தொகையை இன்று பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
PM கிசான் திட்டம்:
இந்தியாவில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பிஎம் கிசான் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் வாயிலாக ஒரு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது 3 கட்டமாக ரூ.2000 என்ற கணக்கில் வழங்கப்படும். இதுவரை 14 தவணைகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தற்போது கிசான் திட்டத்தின் 15-வது தவணை தொகையை இன்று பிரதமர் மோடி ஜார்கண்டில் வெளியிட உள்ளார்.
ஞாயிறு (நவ.19) அரசு ஊழியர்களுக்கு வேலை நாள் – அதிரடி உத்தரவு!
இதன் வாயிலாக மொத்தமாக சுமார் 18,000 கோடி ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. இதுவரை இத்திட்டத்தின் கீழ் சுமார் 30 மில்லியனுக்கும் அதிகமான பெண் விவசாயிகள் பயனடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு pmkisan.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம்.