மலேரியா, டெங்கு நோய்களுக்கு கூட காப்பீட்டுத் திட்டம் இருக்க?.. போன்பே வின் அசத்தல் திட்டம்

0
???????, ?????? ??????????? ??? ???????????? ??????? ???????.. ?????? ???? ??????? ???????
மலேரியா, டெங்கு நோய்களுக்கு கூட காப்பீட்டுத் திட்டம் இருக்க?.. போன்பே வின் அசத்தல் திட்டம்

மலேரியா, டெங்கு நோய்களுக்கு கூட காப்பீட்டுத் திட்டம் இருக்க?.. போன்பே வின் அசத்தல் திட்டம்

 

மருத்துவ அவசர நிலையின் போது மக்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவதில் காப்பீடு திட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், மருத்துவ சிகிச்சையில் உள்ள  அதிக செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் தனிநபர்கள் தரமான சுகாதார சேவைகளை அணுக காப்பீடு திட்டம் உதவி செய்கிறது. இந்நிலையில் சில காப்பீடு திட்டங்களின் பிரீமியம் தொகை அதிகமாக இருப்பதால்  மக்கள் பலரும்  எந்த காப்பீடு திட்டத்திலும் சேருவதில்லை.

வங்கியில் இருந்து லட்சக்கணக்கில் பணம் எடுக்கணுமா..?? ஆனா, அதுக்கு என்ன ரூல்ஸ்-னு தெரியலையா.?? அப்போ உங்களுக்கு தான் இந்த பதிவு..!!

ஆனால் போன்பே (Phone Pe) ஆண்டுக்கு வெறும் “59 ரூபாயில்” காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும், மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, ஜப்பான் என்செபாலிடிஸ், ஸ்வைன் ஃப்ளூ, போர்டு ஃப்ளூ, டைபாய்டு, காசநோய் போன்ற கொசு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் இந்த காப்பீடு உகந்தது. இந்த காப்பீட்டுத் திட்டத்தில் “ஒரு லட்சம் ரூபாய்” வரை காப்பீடு பெறலாம். ஏற்கனவே ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்திருக்கும் பயனர்கள்  கூடுதல் பாதுகாப்புக்காக இந்தத் திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க உங்கள் ஸ்மார்ட்போனில் Phone Pe செயலில் முகப்பு திரையில் இருந்து, மெனுவில் அமைந்துள்ள “காப்பீடு” பகுதிக்கு செல்லவும். பின்பு “டெங்கு மற்றும் மலேரியா” இன்சூரன்ஸ் விருப்பத்தை தேர்வு செய்து கவரேஜ் விவரங்கள், காப்பீட்டுத் தொகை மற்றும் பிரீமியம் விவரங்களை தெரிந்து கொள்ளவும். பின்பு பாலிசிதாரரின் பெயர், தொடர்புத் தகவல்களை நிரப்பி உங்களுக்கு விருப்பமான கட்டணத்தை தேர்வு செய்து பணம் செலுத்தியவுடன் திட்டம் உறுதிசெய்யப்படும்.

 

    Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!