பிஎஃப் பணத்தை எடுக்க போறீங்களா..இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

0

பிஎஃப் பணத்தை எடுக்க போறீங்களா..இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

இந்தியாவின் பிரபலமான ஓய்வூதிய சேமிப்புத் திட்டங்களில் ஒன்றான பிஎஃப், திருமணம், மேற்படிப்பு, வீடு வாங்குதல் அல்லது கட்டுதல் மற்றும் மருத்துவப் பிரச்சனைகள் போன்ற முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளுக்கு மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கிறது. இருப்பினும், மேற்குறிப்பிட்ட இந்த நிகழ்வுகளில் ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, அதற்கான தகுதி, வரம்புகள் மற்றும் உங்கள் பிஎஃப் சேமிப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தைப் புரிந்துகொள்வது முக்கியம்.

திருமணம் மற்றும் கல்விக்காக நீங்கள் பணம் எடுத்தால், உங்கள் வாழ்நாளில் மூன்று முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. வீடு வாங்க அல்லது கட்டுவதற்காக நீங்கள் உங்கள் பிஎஃப் பணத்தை எடுக்க விரும்பினால் வீடு அல்லது நிலம் உங்கள் பெயரில் அல்லது உங்கள் மனைவியின் பெயரில் அல்லது உங்கள் இருவரின் பெயரில் சொந்தமானதாக இருக்க வேண்டும். மேலும், குறிப்பிட்ட அந்த சொத்து சட்ட சிக்கல்கள் எதுவும் இல்லாமல் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கலால் வரி உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயருமா?

மருத்துவ சிகிச்சைக்காக உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம், இதற்கென்று குறிப்பிட்ட வரம்பு எதுவும் இல்லை. அதே நேரத்தில், நீங்கள் பெறக்கூடிய அதிகபட்ச தொகை, உங்களது ஆறு மாத அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி அல்லது உங்கள் மொத்த பிஎஃப் இருப்பு ஆகியவற்றில் மிகக் குறைவானதாக இருக்க வேண்டும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!