தமிழகத்தில் ஒரு வருடமாக மாறாத பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம் இதோ!

0
தமிழகத்தில் ஒரு வருடமாக மாறாத பெட்ரோல், டீசல் விலை – இன்றைய நிலவரம் இதோ!

தமிழகத்தில் தொடர்ந்து 365 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் பெட்ரோல் ரூ.102.63க்கும் டீசல் ரூ.94.24க்கும் விற்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை:

தற்போது பொதுமக்களிடையே வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிகமாக இயங்கி வருகிறது. தமிழகத்தின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பெட்ரோலின் விலை ஏற்றம் பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (மே.22) கரண்ட் இருக்காது – பகுதிகள் குறித்த விவரம் வெளியீடு!

இருப்பினும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் பெட்ரோல் ரூ.110.85 மற்றும் டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாய் மற்றும் கலால் வரி லிட்டருக்கு 7.50ரூபாய் குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து சென்னையில் மே 22 ஆம் தேதி பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி 365 வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி பெட்ரோல் விலை ரூ.102.63க்கும் டீசல் ரூ.94.24க்கும் விற்கப்பட்டு வருகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!