ஆன்லைன் ஆர்டர் மூலமாக பணத்தை இழக்கும் பொதுமக்கள் – எச்சரிக்கும் போலீசார்!

0
ஆன்லைன் ஆர்டர் மூலமாக பணத்தை இழக்கும் பொதுமக்கள் - எச்சரிக்கும் போலீசார்!
ஆன்லைன் ஆர்டர் மூலமாக பணத்தை இழக்கும் பொதுமக்கள் - எச்சரிக்கும் போலீசார்!
ஆன்லைன் ஆர்டர் மூலமாக பணத்தை இழக்கும் பொதுமக்கள் – எச்சரிக்கும் போலீசார்!

instagram, facebook போன்ற சமூக வலைப்பக்கங்களில் விற்பனை செய்யும் பொருட்களை நல்ல ஆஃபரில் கிடைக்கிறது என நம்பி அதற்கான பணத்தை செலுத்தி பொதுமக்கள் அதிக அளவில் ஏமாறுவதாக போலீசார் தற்போது எச்சரித்துள்ளனர்.

போலீஸ் எச்சரிக்கை:

உலகம் முழுவதும் amazon, flipkart போன்ற நிறுவனங்களைக் காட்டிலும் இன்ஸ்டாகிராம், facebook போன்ற இணையதள பக்கங்கள் மூலமாக அதிகளவிலான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், amazon, flipkart, meesho போன்ற ஆப் மூலமாக ஆர்டர் செய்யும் போது, அந்த ஆர்டர் கைக்கு வந்த பிறகு பணம் கொடுத்தால் போதும் என்கிற வசதி இருக்கிறது. ஆனால், instagram facebook போன்ற சமூக வலைப்பக்கங்கள் மூலமாக ஆர்டர் செய்யும் பொழுது அந்த பொருட்களுக்கான முழு பணத்தையும் செலுத்தினால் மட்டுமே ஆர்டர் உறுதி செய்யப்படும்.

PNB வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 6000 உதவித்தொகை – பரவும் குறுச்செய்தி.. அதிகாரிகள் விளக்கம்!

மேலும். இதுபோன்ற சமூக வலைப்பக்கங்களில் விற்கப்படும் பொருட்களை மிகவும் அழகாக புகைப்படம் வீடியோ எடுத்து அதிக தரம் கொண்ட பொருட்களாக காட்டி பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பொருட்களை flipkart, amazon-ல் கூட இவ்வளவு நல்ல ஆஃபரில் வாங்க முடியாது என நினைத்து பொதுமக்கள் பலரும் ஏமாந்து கொண்டிருக்கின்றனர். மேலும், பல சமூகவலைதள பக்கங்களில் பொதுமக்களிடமிருந்து அந்த பொருட்களுக்கான அட்வான்ஸ் தொகையை வாங்கிய பிறகு தொடர்பை மொத்தமாகவே துண்டித்து விடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி மக்களுக்கு போலீசார் சமூக வலைத்தளங்களில் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!