PNB வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ. 6000 உதவித்தொகை – பரவும் குறுச்செய்தி.. அதிகாரிகள் விளக்கம்!
மத்திய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 6000 உதவித்தொகை வழங்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து வங்கி சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை:
நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தனது 130 – வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 6000 உதவித்தொகை வழங்கவுள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக தகவல்கள் பரவி வருகிறது
மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மது அருந்தும் தீர்ப்புக்கு தடை – ஐகோர்ட் உத்தரவு!
இவ்வாறு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளில் இணையதள முகவரி இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதள முகவரி அதிகாரபூர்வமாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து அனுப்பப்படுவது போலவே காட்சியளிக்கிறது. இது குறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
அதில் குறுஞ்செய்திகளில் இணைக்கப்பட்டுள்ள லிங்குகள் முற்றிலும் போலியானது. இதனை கிளிக் செய்யும் போது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. மேலும் ரூ. 6000 உதவித்தொகை வழங்கப்படும் என்ற தகவல் முற்றிலும் போலியானது. வங்கி சார்பாக இது போன்ற எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.