
உங்களுக்கு இலவசமா கேஸ் சிலிண்டர் வேண்டுமா..? அப்போ போன் பேயின் இந்த சலுகையை பத்தி தெரிஞ்சுக்கோங்க…!!
அதாவது, உங்கள் வீட்டில் கேஸ் சிலிண்டர் தீர்ந்துவிட்டால், அதை PhonePe மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு சிலிண்டர் இலவசமாகக் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக PhonePe கூறியுள்ளது. மேலும், ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரத்திற்குள் LPG சிலிண்டரை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என கூறப்படுகிறது. இந்த சலுகையை பொறுத்தவரை, சிலிண்டரை முன்பதிவு செய்பவர்களுக்கு 100 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும். மேலும், PhonePe வழங்கும் இந்த சலுகை டிசம்பர் 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, UPI, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, வாலட் போன்ற எந்த முறையை பயன்படுத்தியும் PhonePe மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். ஆனால் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு முறை மட்டுமே 100 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும் என்றும், இந்த சலுகையை எந்த நேரத்திலும் திரும்பப் பெற PhonePe-க்கு உரிமை உண்டு என்ற நிபந்தனையையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


























