பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தமில்லை…!! கோரிக்கையை நிராகரித்த தமிழக அரசு…!
தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களது பணியினை நிரந்தரமாக்க வேண்டி போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, ‘10 ஆண்டுகளுக்கு மேலாக பணியில் இருக்கும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் செய்யப்படும்’ என திமுக அரசு வாக்குறுதி அளித்தது. இந்நிலையில் இது தொடர்பாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
யுபிஐ வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு…!! ஏப்ரல் 1 முதல் செயல்படாத ஐடிகள் முடக்கப்படும் என தகவல்…!
அதாவது, கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக தற்காலிமாக பணியில் இருக்கும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களின் பணியினை நிரந்தரம் செய்யவும், அதிகரித்து வரும் செலவினை ரூ 12,500 சம்பளத்தால் ஈடுக்கட்ட முடியாததால் ஊதிய உயர்வும் அளிக்கக்கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். மேலும், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எனவே, பகுதிநேர ஆசிரியர்கள், முதல்வர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு கோரி மனு அனுப்பி இருந்தனர். தற்போது, அதற்கு பதில் அளிக்கும் விதமாக “பணி நிரந்தர கோரிக்கை நிராகரிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில்” குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பப்பட்டுள்ளது


























