புது சீரியலில் கமிட்டான “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நடிகை – உற்சாகத்தில் ரசிகர்கள்!
தமிழ் சின்னத்திரையில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் அது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறது. அந்த வகையில் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை புது சீரியலில் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சீரியல் நடிகை:
தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவிற்கு சின்னத்திரை நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் பல முன்னணி சீரியல்களில் ஹீரோ ஹீரோயின் மற்றும் குணச்சித்திர நடிகர்கள் மற்ற சீரியல்களில் நடித்தாலும் ரசிகர்கள் அதனை விரும்பி பார்க்கின்றனர்.
அந்த வகையில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தின் அம்மாவாக பார்வதி ரோலில் நடித்து வருபவர் நடிகை சாந்தி வில்லியம்ஸ். அவர் இதற்கு முன்னதாக பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். பாசிட்டிவ் கதாபாத்திரத்தை விட, அவர் நெகட்டிவ் கதாபாத்திரமாக நடிப்பதை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை சாந்தி வில்லியம்ஸ் தற்போது புது சீரியலில் கமிட்டாகி இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அவர் தற்போது ராஜம்மாள் ப்ரொடெக்சன் இயக்கும், தெய்வம் தந்த பூவே சீசன் 2ல் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த சீரியலில் ஹீரோவிற்கு அம்மாவாக அவர் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் அஜய் பரத் நடிக்க இருப்பதாக தற்போது வெளியான அறிவிப்பில் தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் இந்த சீரியலில் நெகட்டிவ் ரோலில் வருகிறாரா அல்லது பாஸிட்டிவ் ரோலில் நடிக்க இருக்கிறாரா என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.