கடையில் லாபம் வரும் என நம்பிக்கை உடன் இருக்கும் கதிர், கொடைக்கானல் கிளம்ப திட்டமிடும் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

0
கடையில் லாபம் வரும் என நம்பிக்கை உடன் இருக்கும் கதிர், கொடைக்கானல் கிளம்ப திட்டமிடும் மூர்த்தி - இன்றைய எபிசோட்!
கடையில் லாபம் வரும் என நம்பிக்கை உடன் இருக்கும் கதிர், கொடைக்கானல் கிளம்ப திட்டமிடும் மூர்த்தி - இன்றைய எபிசோட்!
கடையில் லாபம் வரும் என நம்பிக்கை உடன் இருக்கும் கதிர், கொடைக்கானல் கிளம்ப திட்டமிடும் மூர்த்தி – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் தான் விட்ட சவாலில் ஜெயிக்க இன்றே கடைசி நாள் என மல்லி குத்தி காட்டி பேசுகிறார். பின் சாப்பிட வந்தவர்கள் நல்லவிதமாக பேச அதை கேட்டு கதிருக்கு நம்பிக்கை வருகிறது. மறுபக்கம் மூர்த்தி கொடைக்கானலில் கல்யாணம் இருப்பதாக சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் இரண்டாவது நாள் இலவச பிரியாணி கொடுக்க ஏற்பாடுகளை செய்ய முல்லை அம்மா தான் சொல்வதை கேட்காமல், கதிர் வேலை செய்வதை பார்த்து சத்தம் போடுகிறார். அப்போது முல்லை அப்பா மாப்பிள்ளை எதோ நம்பிக்கை உடன் செய்கிறார் விடு என சொல்ல, அப்போது மல்லி வருகிறார். 29 நாட்கள் நடக்காதது இனி எப்படி நடக்கும், சவாலை முடிக்க இன்னும் 8 மணி நேரம் தான் இருக்கிறது. அதன் பின் முல்லையை என்னுடன் அழைத்து கொண்டு செல்ல போகிறேன் என சொல்ல, உடனே முல்லை நாங்க நஷ்டத்தில் இருந்தாலும், நான் அவருடன் தான் இருப்பேன் என சொல்கிறார்.

பின் முல்லை அப்பா, கதிரிடம் இத்தனை நாள் பணம் இருந்தது எல்லாம் செய்தோம். ஆனால் இன்று கடன் வாங்கி தான் பிரியாணி செய்து இருக்கிறோம் என சொல்கிறார். ஆனால் கதிர் நம்பிக்கை இருப்பதாக சொல்கிறார். அனைவரும் சாப்பிட இன்னும் எத்தனை நாள் பிரியாணி இலவசமாக போடுவீங்க என மல்லி கேட்டு கிண்டல் செய்கிறார். அனைவரும் வந்து இலவச பிரியாணியை சாப்பிட்டுவிட்டு செல்ல, யாருமே பணம் போடவில்லை. உடனே மல்லி நான் பணம் போடுகிறேன் என சொல்லி கிண்டல் செய்கிறார். பின் சாப்பிட்டு விட்டு வெளியே சென்றவர்கள் சாப்பாடு அருமையாக இருந்ததாக சொல்கின்றனர்.

பாக்கியாவிடம் மன்னிப்பு கேட்ட செழியன், ஆதரவாக பேசிய எழில் – இன்றைய எபிசோட்!

நாளைக்கு இலவசமாக கொடுக்கமாட்டார்கள் என சொல்ல, பரவாயில்லை காசு கொடுத்தாலும் அது பயனுள்ளதாக தான் இருக்கும் என சாப்பிட வந்தவர்கள் சொல்கிறார்கள். கதிர் இதை கேட்டு இது போதும் எப்படியாவது மேலே வந்துவிடலாம் என நம்பிக்கையுடன் இருக்கிறார். மல்லி நீங்க சொன்ன சவால் முடிவு தான் இப்பவே தெரிந்துவிட்டதே பிறகு என்ன இப்பவே கிளம்பு மதுரைக்கு போகலாம் என சொல்கிறார். உன் வாயில் நல்ல வார்த்தை வராதா என முல்லை கேட்க, மல்லி உன்னை காப்பாற்ற அந்த கடவுள் வருவார் என நக்கலாக பேசுகிறார்.

Exams Daily Mobile App Download

மறுபக்கம் மூர்த்தி கடையில் இருந்து வீட்டிற்கு வர, கண்ணன் என்ன அதற்குள் வந்துவிட்டீர்கள் என கேட்கிறார். பின் தனம் வந்து காபி கொடுக்க மூர்த்தி முக்கியமான ஒருவரின் மகன் கல்யாணம் கொடைக்கானலில் நடைபெற இருப்பதாக சொல்கிறார். ஆமாம் பத்திரிகை கொடுத்ததாக தனம் சொல்ல, கண்ணன் அப்போ நாம எல்லாரும் கொடைக்கானல் போக போறோமா என கேட்கிறார். மீனா நீ இப்போ வேலைக்கு சென்றுவிட்டாய் என சொல்ல, கண்ணன் 2 நாட்கள் லீவு போட்டு நானும் கொடைக்கானல் வருவேன் என சொல்கிறார். ஜீவா கடையை பார்த்துக் கொள்ளட்டும் நாம எல்லாரும் போவோம் என மூர்த்தி சொல்ல, மீனா ஜீவாவை தனியாக விட்டு வர முடியாது என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!