பான் கார்டு வைத்திருக்கிங்களா? இதை கொஞ்சம் கவனிங்க!
இன்றைய கால கட்டத்தில் ஆதார் முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அட்டையானது குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை முதலியனவற்றை கொண்டுள்ளது. இந்திய குடிமகனின் அடையாள அட்டையாக ஆதார் அட்டை கருதப்படுகிறது. ஆதார் எண்ணானது தற்போது வங்கிகள் முதல் ரேஷன் அட்டை வரை அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ள முக்கிய ஆவணமாகும். அதேபோல் PAN அட்டை வருமான வரித்துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Associate-II வேலை – சம்பளம்: ரூ.35,000/- || முழு விவரங்களுடன்!
பான் கார்டுகளில் அப்பாவின் முழுப்பெயர் இல்லாமல், இனிஷியல் மட்டும் இருந்தால் அந்த பான் கார்டு செல்லாது என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. இனிஷியலோடு இருக்கும் பான் கார்டுகள் ஆதார் கார்டுடன் இணைக்கும்போது மட்டுமே சிக்கல் உருவாகலாம். மற்றபடி இனிஷியலுடன் இருக்கும் பான் கார்டுகளில் உடனடியாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்கிற தகவல் பொய்யானது. வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் பக்கங்களிலும் இனிஷியலுடன் இருக்கும் பான் கார்டுகள் செல்லாது என எங்கும் தெரிவிக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

























